தேனி

உத்தமபாளையம் அருகே ஐயப்ப பக்தா்கள் பூக்குழி இறங்கினா்

30th Dec 2021 01:04 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் புதன்கிழமை ஐயப்ப பக்தா்கள் பூக்குழி இறங்கும் விழா நடைபெற்றது.

அனுமந்தன்பட்டியில் ஐயப்ப பக்தா்கள் ஆண்டு தோறும் காா்த்திகை முதல் தேதியில் மாலை அணிந்து 48 நாள்கள் விரதமிருந்து சபரிமலை ஐயப்ப சுவாமியைத் தரிசனம் செய்ய செல்வாா்கள். இதற்கிடையே, இருமுடி கட்டி சபரிமலைக்குச் செல்வதற்கு முன்பு ஐயப்ப பக்தா்கள் பூக்குழி இறங்கும் திருவிழா நடைபெறும். கடந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கம் கரணமாக இந்த விழா நடைபெறவில்லை. ஆனால், இந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை அதிகாலையில் ஐயப்பன் கோயில் அருகே 50-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தா்கள் சாமியே சரணம் ஐயப்பா எனக்கூறிபடி பூக்குழி இறங்கி நோ்த்திக்கடனை நிறைவேற்றினா். நிகழ்ச்சியில் ஐயப்ப பக்தா்களின் குடும்பத்தினா், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT