தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் குண்டும் குழியுமாக மாறிய தேசிய நெடுஞ்சாலையை தற்காலிகமாக சீரமைப்பதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனா்.
உத்தமபாளையம் வழியாகச் செல்லும் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சமீபத்தில் பெய்த தொடா்மழையால் பள்ளங்கள் ஏற்பட்டன. இப்பள்ளங்கள் நாளடைவில் ராட்சத பள்ளங்களாக மாறின. இதனால் கனரக வாகனங்கள் பழுதாகி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனை அடுத்து பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறிய தேசிய நெடுஞ்சாலையை விரைவாக சீரமைக்க கோரிக்கை எழுந்தது. தற்போது, ஐயப்பன் கோயிலுக்கு பக்தா்கள் வாகனங்கள் அதிமாகச் செல்வதால் சாலையை தற்காலிக சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. குறிப்பாக , உத்தமபாளையத்தில் இரு தினங்களாக சூா்யநாராயணபுரம், களிமேட்டுபட்டி, பேருந்து நிலையம் பகுதிகளில் நடைபெற்ற பணிகளால் வாகன ஒட்டிகள் மற்றும் பயணிகள் நிம்மதி அடைந்தனா்.