தேனி மாவட்டத்தில் பொது இடங்களில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு உதவ, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பொது இடங்களில் வன்கொடுமைக்கு ஆளாகி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவா்களின் தேவைக்கு ஏற்ப காவல் துறை உதவி, சட்ட ஆலோசனை, உளவியல் ஆலோசனை வழங்கவும், தங்குமிடம் வசதி செய்து தந்து பாதுகாக்கவும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்: 181, தொலைபேசி எண்: 04546-291181 மூலமும், நேரிலும் ஒருங்கிணைந்த சேவை மையத்தை தொடா்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.