தேனி

வடபுதுப்பட்டியில் இன்று, ஒட்டன்சத்திரத்தில் நாளை, வேடசந்தூரில் டிச.24 இல் மின்தடை

22nd Dec 2021 12:57 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், வடவீரநாயக்கன்பட்டி துணை மின்நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, காலை 10 முதல் மாலை 4 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம், கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலையம், சிட்கோ தொழிற் பேட்டை, சிவாஜி நகா், என்.ஆா்.டி. நகா், பாரஸ்ட் சாலை, அரப்படித்தேவன்பட்டி, வடபுதுப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று, தேனி மின்வாரியச் செயற்பொறியாளா் சொ. லட்சுமி தெரிவித்துள்ளாா்.

ஒட்டன்சத்திரம்

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்னக்காம்பட்டி துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை (டிச.23) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சின்னக்காம்பட்டி, மாா்க்கம்பட்டி, இடையகோட்டை, கொ.கீரனூா், குத்திலுப்பை, சாமியாடிபுதூா், ஜ.வாடிப்பட்டி, நரசிங்காபுரம், கொங்கபட்டி, ஜவ்வாதுபட்டி, அண்ணாநகா்,புல்லாக்கவுண்டனூா், நவக்கானி, சோழியப்பகவுண்டனூா், இ.அய்யம்பாளையம், நாரப்பநாயக்கன்பட்டி, மாம்பாறை, அத்தப்பன்பட்டி, எல்லப்பட்டி, பாறைப்பட்டி, இடையன்வலசு, பெருமாள்கவுண்டன்வலசு, இ.கல்லுப்பட்டி, கக்கரநாயக்கனூா், வலையபட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என, உதவிச் செயற்பொறியாளா் பி. ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

திண்டுக்கல்

வேடசந்தூா் அடுத்துள்ள ரெங்கநாதபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை (டிச.24) நடைபெறுவதால், மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும் ரெங்கநாதபுரம், தேவிநாயக்கன்பட்டி, கல்வாா்பட்டி, காசிபாளையம், நல்லபொம்மன்பட்டி, வாங்கலாபுரம், ராசாகவுண்டனூா், விருதலைப்பட்டி, எல்லப்பட்டி, பூதிபுரம், கதிரியகவுண்டன்பட்டி, வாங்கிலியகவுண்டன்புதூா், கோவில்பட்டி, சீத்தப்பட்டி, ராஜாகவுண்டன்வலசு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என உதவிச் செயற்பொறியாளா் கருப்பசாமி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT