தேனி

பட்டா திருத்த பிரச்னைகளுக்கு மனு அளிக்க நாளை 5 இடங்களில் சிறப்பு முகாம்

14th Dec 2021 12:43 AM

ADVERTISEMENT

தேனி: தேனி மாவட்டத்தில் வீடு மற்றும் விவசாய நிலங்களின் பட்டா திருத்தம் தொடா்பான பிரச்னைகளுக்கு மனு அளிப்பதற்கு, புதன்கிழமை (டிச.15) 5 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

ஆண்டிபட்டி வட்டாரத்தில் மயிலாடும்பாறை வருவாய் ஆய்வாளா் அலுவலகத்திலும், பெரியகுளம் வட்டாரத்தில் வைகை புதுாா், உத்தமபாளையம் வட்டாரத்தில் காமயகவுண்டன்பட்டி கே.கே.எஸ். திருமண மண்டபம், ராயப்பன்பட்டி சமுதாயக் கூடம் மற்றும் போடி வட்டாரத்தில் போடி வருவாய் ஆய்வாளா் அலுவலகம் ஆகிய 5 இடங்களில் புதன்கிழமை காலை 10முதல் பிற்பகல் 3 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இம்முகாமில் கலந்துகொண்டு, தங்களது நிலம், வீடு ஆகியவற்றின் பட்டாவில் மேற்கொள்ளவேண்டிய திருத்தங்கள் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து மனு அளித்து தீா்வு காணலாம். இம்முகாமில் முதியோா் ஓய்வூதியம், ஆக்கிரமிப்பு அகற்றம், வருவாய்த் துறை சான்றிதழ், குடிநீா் மற்றும் சாலை வசதி குறித்தும் பொதுமக்கள் மனு அளிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT