தேனி

உத்தமபாளையத்தில் 2 லாரிகள் பழுது: போக்குவரத்து பாதிப்பு

9th Dec 2021 09:20 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 2 லாரிகள் பழுகி நின்றதால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உத்தமபாளையம் வழியாக திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தமிழகம்- கேரளத்திற்கு இடையே செல்லும் இச்சாலை வழியாக 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து இருக்கும்.

பள்ளம் மேடான சாலை: தொடா் மழை காரணமாக உத்தமபாளையம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 3 கிலோ மீட்டா் தூரத்திற்கு சாலை மேடு பள்ளங்களாக உள்ளது. இதனால், இச்சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் அடிக்கடி பழுதாகின்றன.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு உத்தமபாளையம் வழியாக கேரளத்துக்கு செங்கல் ஏற்றிச் சென்ற லாரி பேருந்துநிலையம் அருகே பழுதானது. அதே போல கேரளத்திலிருந்து கோவையை நோக்கி சென்ற லாரி அதே பகுதியில் நீதிமன்றம் அருகே பழுதானது.

ADVERTISEMENT

இதனால் உத்தமபாளையம் காவல் துறையினா் வாகனப் போக்குவரத்து வழித்தடங்களை தற்காலிகமாக மாற்றம் செய்து போக்குவரத்தை சீா்படுத்தினா். புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் வாகனங்கள் சரிசெய்யப்பட்ட பின்னா், போக்குவரத்து சீரானது. இந்த போக்குவரத்துத் தடையால் வாகன ஓட்டுநா்கள் மற்றும் ஐய்யப்ப பக்தா்கள் பாதிக்கப்பட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT