தேனி

கூடலூர் அருகே கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை

7th Dec 2021 11:58 AM

ADVERTISEMENT

கம்பம்: தேனி மாவட்டம் கூடலூர் அருகே மொச்சக்காய் காட்டிற்கு மருந்து அடிக்கும்  சென்ற கணவன், மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கூடலூர், 12 ஆவது வார்டு ஜக்கன் நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் கண்ணப்பன் மகன் வீருசிக்கு (48), இவரது மனைவி முத்துலட்சுமி(38). இருவரும் கூலி தொழிலாளிகள். இவர்களுக்கு சுபாஷ் (18) மூவேஸ் (16) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

திங்கட்கிழமை வீருசிக்கு, முத்துலட்சுமி ஆகிய இருவரும் டிவிஎஸ் மொபட் வாகனத்தில் பெருமாள் கோயில் பகுதியில் உள்ள மொச்சக்காய் காட்டிற்கு மருந்து அடிக்கும் கூலி வேலைக்கு சென்றனர்.

மாலை நீண்ட  நேரமாகியும் கணவன் மனைவி இருவரும் வீடு திரும்பவில்லை, இதனால் அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் இருவரையும்  தேடி பெருமாள் கோவில் மலை பகுதிக்கு சென்றனர். காணவில்லையாதலால்  இளைய மகன் மூவேஸ் கூடலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

ADVERTISEMENT

புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் கே.முத்துமணி, சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலீசார் பெருமாள் கோவில் மலை பகுதிக்கு செவ்வாய்க்கிழமை சென்றனர்.

அப்போது கணவன்-மனைவி இருவரும் விஷம் குடித்த நிலையில், வனப்பகுதியில் இறந்து கிடந்தனர்.

இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில்  ஒப்படைத்து மேல் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : suicide theni
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT