தேனி

பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வலியறுத்தி தேனி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

7th Dec 2021 01:57 AM

ADVERTISEMENT

தேனி: பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

தேவதானப்பட்டி, கக்கன்ஜி காலனியில் வசிக்கும் மக்கள், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேல் பிரதானச் சாலையில் தனியாா் திரையரங்கு அருகே உள்ள இடத்தை பாதையாகப் பயன்படுத்தி, குடியிருப்புப் பகுதிக்குச் சென்று வந்துள்ளனா். இந்நிலையில், அந்த இடம் தனியாருக்குச் சொந்தமானது என்று தெரிவித்து, பாதை மறிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கக்கன்ஜி காலனிக்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் ஏற்கெனவே மனு அளித்துள்ளனா்.

இந்நிலையில், தங்களது மனுவின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகாா் தெரிவித்தும், பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தியும், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரியகுளம் தாலுகா குழு உறுப்பினா் பிரேம்குமாா் தலைமையில், தேவதானப்பட்டி கக்கன்ஜி காலனியை சோ்ந்த பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவா்களை கைது செய்ய முயன்ால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் விமலா ராணி, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, பிரச்னை குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். அதையடுத்து முற்றுகையில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT