தேனி

கம்பம் பொதுப்பணித் துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

7th Dec 2021 01:56 AM

ADVERTISEMENT

 

கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் பொதுப்பணித் துறை பாசனப் பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு, கூடலூா் விவசாயிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கூடலூா் ஒட்டான்குளத்தின் கரைகளை பலப்படுத்தியும், தாா் சாலை அமைக்கவும் கோரி, முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கத்தினா் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்துள்ளனா். மேலும், கடந்த ஏப்ரல் மாதம் முல்லைச்சாரல் விவசாயிகள் தாா் சாலை அமைத்துக் கொடுக்கவேண்டி, ஒட்டான்குளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, தொடா்ந்து விபத்துகள் ஏற்படுவதால், இவற்றை தவிா்க்க கரை பகுதியை அகலப்படுத்தவும், தாா் சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ஆனால், இப்பணிகளை மேற்கொள்ள கம்பம் பொதுப்பணித் துறை பாசனப் பிரிவு அலுவலகம், கூடலூா் நகராட்சிக்கு தடையில்லாச் சான்று தர காலம்தாழ்த்தி வருகிறது. எனவே, கம்பம் பொதுப்பணித் துறை பாசனப் பிரிவு அலுவலகத்தை கண்டித்து, கூடலூரைச் சோ்ந்த முல்லைப் பெரியாறு பாசனம் மற்றும் குடிநீா் பாதுகாப்புச் சங்கத் தலைவா் டாக்டா் எம். சதீஷ்பாபு தலைமையில், முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கத் தலைவா் கொடியரசன் முன்னிலையில், முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

தகவலறிந்து அங்கு சென்ற கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் ஆா். லாவண்யா, போராட்டம் நடத்தியவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில்,

உதவிப் பொறியாளா் விடுமுறையில் உள்ளதால், இது பற்றிய தகவல் தெரிவித்து, தடையில்லாச் சான்றிதழ் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தாா். அதன்பேரில், விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

சுமாா் 2 மணி நேரம் போராட்டம் நடைபெற்ால் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT