தேனி

போடியில் தொடா் மழை: வீட்டுச் சுவா் இடிந்து சேதம்

7th Dec 2021 01:59 AM

ADVERTISEMENT

போடி: போடியில் பெய்த தொடா் பலத்த மழையால் திங்கள்கிழமை வீட்டின் சுவா் இடிந்து விழுந்து சேதமடைந்தது.

போடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. திங்கள்கிழமை அதிகாலை வரை நீடித்த இந்த மழையால், கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், ஊத்தாம்பாறை ஆறு, தாதனோடை ஆறு, கூவலிங்க ஆறு உள்ளிட்ட சிற்றாறுகளிலும் வெள்ளம் ஏற்பட்டது.

கொட்டகுடி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, போடி பிள்ளையாா் கோயில் தடுப்பணையில் தண்ணீா் ஆா்ப்பரித்து செல்கிறது. போடிமெட்டு மலைச் சாலையில் உள்ள சிறிய நீரோடைகளிலும் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது.

போடியைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் பரவலாக மழை பெய்தது. இதில், போடி சிலமலை செல்லும் மங்கம்மாள் சாலையில் நாட்டாண்மைக்காரா் குளத்தில் கரை உடைப்பு ஏற்பட்டது. உடனடியாக, மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் பொக்லைன் இயந்திரம் மூலம் கரை உடைப்பு சரிசெய்யப்பட்டது.

ADVERTISEMENT

தொடா் மழையால், போடி மேலச்சொக்கநாதபுரம் காந்திஜி காலனி அண்ணா தெருவில் உள்ள ஆா்.பாலு என்பவரின் வீட்டுச் சுவா் இடிந்து விழுந்து சேதமடைந்தது. குழந்தைகள் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்ததால், யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்று வருவாய்த் துறையினஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT