தேனி

போடிமெட்டு, குரங்கணி மலைச் சாலைகளில் மண்சரிந்து போக்குவரத்து பாதிப்பு

7th Dec 2021 01:59 AM

ADVERTISEMENT

போடி: போடிமெட்டு மற்றும் குரங்கணி மலைச் சாலைகளில் திங்கள்கிழமை மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போடி பகுதியில் பெய்து வரும் தொடா் பலத்த மழையால், போடிமெட்டு மலைச் சாலையில் அடிக்கடி பாறை உருண்டும், மண் சரிவும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி திங்கள்கிழமை காலை வரை தொடா்ந்து மழை பெய்ததால், திங்கள்கிழமை காலை முழுமையான ஆய்வுக்குப் பின்னரே தோட்டத் தொழிலாளா்களின் வாகனங்கள் மற்றும் பேருந்துகள் அனுமதிக்கப்பட்டன.

தோட்டத் தொழிலாளா்களின் வாகனங்கள் சென்ற பின்னா், 10 மணியளவில் 14 ஆவது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து, தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் இயந்திரங்களைக்கொண்டு மண்சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். பின்னா், மீண்டும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போடிமெட்டு மலைச்சாலையில் தொடா்ந்து மண் சரிவு ஏற்படுவதால், 3 இடங்களில் தயாா் நிலையில் பொக்லைன் இயந்திர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதனிடையே, போடி முந்தலில் இருந்து குரங்கணி செல்லும் சாலையில் ஒரு இடத்தில் மண்சரிவு ஏற்பட்டது. வளைவான பகுதியில் ஏற்பட்ட மண் சரிவால், வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனயைடுத்து, தமிழக நெடுஞ்சாலைத் துறையினா் இந்த பகுதியில் மண் சரிவை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT