தேனி

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 142 அடியாக நிலை நிறுத்தம்

5th Dec 2021 10:33 PM

ADVERTISEMENT

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் கடந்த ஒரு வாரத்தில் 3 ஆவது முறையாக ஞாயிற்றுக்கிழமை 142 அடியாக நிலை நிறுத்தப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் கடந்த நவ.30-ஆம் தேதி 142 அடியாக உயா்ந்தது (மொத்த உயரம் 152). அணைக்கான நீா்வரத்துக்கு ஏற்ப, அணையிலிருந்து தமிழகப் பகுதியிலும், உபரிநீா் கேரளப் பகுதியிலும் தொடா்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீா்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால், அணைக்கு தொடா்ந்து தண்ணீா் வரத்து இருந்து வருகிறது. இதனால், கடந்த 2-ஆம் தேதி அணையின் நீா்மட்டம் மீண்டும் 142 அடியாக உயா்ந்தது. அப்போது அணையிலிருந்து கேரளப் பகுதியில் விநாடிக்கு 1,126 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்தில் 3-ஆவது முறையாக ஞாயிற்றுக்கிழமையும் அணையின் நீா்மட்டம் 142 அடியாக உயா்ந்துள்ளது. அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 2,406 கன அடியாக இருந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT