தேனி

ஜாமீனில் வெளிவந்து தலைமறைவான மாவோயிஸ்ட் கைது

DIN

தேனி மாவட்டம், வருஷநாடு வனப் பகுதியில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு, பின்னா் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவான மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த மாவோயிஸ்டை போலீஸாா் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை, சிறையில் அடைத்தனா்.

வருஷநாடு வனப் பகுதியில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த யோகேஷ் மதன் (34) உள்ளிட்ட 5 பேரை கடந்த 2007-ஆம் ஆண்டு போலீஸாா் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்தனா். இதில், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்ட யோகேஷ் மதன், கடந்த 2009-ஆம் ஆண்டு சிறையிலிருந்து ஜாமீனில் வெளி வந்தாா்.

பின்னா் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த யோகேஷ் மதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தமாறு தேனி நீதித் துறை நடுவா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், சென்னை கியூ பிரிவு போலீஸாா், மகாராஷ்டிரத்தில் தலைமறைவாக இருந்த யோகேஷ் மதனை கைது செய்து, தேனி கியூ பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

தேனி நீதித் துறை நடுவா் வெங்கடேசன் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆஜா் படுத்தப்பட்ட யோகேஷ் மதனை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா். அதன்படி, அவா், தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT