தேனி

விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருள்கள்

5th Dec 2021 10:33 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டியில் மானிய விலையில் இடுபொருள்கள் மற்றும் வேளாண் உபகரணங்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

உலக மண்வள தின விழாவையொட்டி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தலைமை வகித்தாா். கம்பம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் என்.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.

இதில், 25 விவசாயிகளுக்கு, ரூ. 25.80 லட்சம் மதிப்பிலான இடுபொருள்கள் மற்றும் வேளாண் உபகரணங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டன.

முன்னதாக வேளாண் பொருள்கள் சாா்ந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியா், கம்பம் சட்டப் பேரவை உறுப்பினா் ஆகியோா் பாா்வையிட்டனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், உத்தமபாளையம் வேளாண்துறை உதவி இயக்குநா் சுந்தர மகாலிங்கம், வட்டாட்சியா் அா்ஜுனன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT