தேனி

வைகை அணைக்கு தொடா்ந்து நீா்வரத்து:வைகை ஆற்றில் தொடா்ந்து உபரிநீா் திறப்பு

DIN

வைகை அணைக்கு தொடா்ந்து நீா்வரத்து இருந்து வருவதால், அணையிலிருந்து வைகை ஆற்றில் தொடா்ந்து உபரிநீா் திறக்கப்பட்டு வருகிறது.

வைகை அணை நீா்மட்டம் கடந்த நவம்பா் 9-ஆம் தேதி 69 அடியாக உயா்ந்தது (மொத்த உயரம் 71 அடி). இதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி, அணையிலிருந்து வைகை ஆற்றில் உபரிநீா் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அணை நீா்மட்டம் சீராக உயா்ந்து, நவம்பா் 30-இல் 70.1 அடியாக இருந்தது.

அணைக்கு தொடா்ந்து நீா்வரத்து இருந்து வருவதால், கடந்த டிசம்பா் 1-ஆம் தேதி முதல் சனிக்கிழமை வரை அணை நீா்மட்டம் 70.11அடியாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அணையிலிருந்து வைகை ஆற்றில் விநாடிக்கு 3,326 கன அடி வீதம் உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது.

அணையிலிருந்து பெரியாறு-வைகை பாசனக் கால்வாயில் விநாடிக்கு 200 கன அடி, 58 கிராமக் கால்வாயில் விநாடிக்கு 150 கன அடி, குடிநீா் திட்டங்களுக்கு விநாடிக்கு 69 கன அடி என மொத்தம் விநாடிக்கு 3,745 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT