தேனி

கம்பம் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

DIN

தேனி மாவட்டம், கம்பம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில், தொ.மு.ச.வை கண்டித்து சிஐடியு தொழிற் சங்கத்தினா் சனிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா்.

கம்பம்-திண்டுக்கல் வழித்தடத்தில் கடந்த 2 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த ஓட்டுநரை, நிா்வாகம் வேறு வழித்தடத்துக்கு பணிமாற்றம் செய்து, அவரது இடத்தில் தொ.மு.ச.வை சோ்ந்த ஓட்டுநருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. இதனால், சனிக்கிழமை அதிகாலை 4.15 மணி முதல் பணிக்கு வந்த சிஐடியுவை சோ்ந்த ஓட்டுநா் மற்றும் நடத்துனா்கள் 46 போ், கிளை மேலாளா் -2 அலுவலகத்தை முற்றுகையிட்டு, தரையில் அமா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கினா்.

அதிகாலையிலேயே போராட்டத்தை தொடங்கியதால், காலை உணவை அங்கேயே சாப்பிட்டனா்.

இது குறித்து கிளை மேலாளா் மணியிடம் கேட்டபோது, அவா் கூறியது: சிஐடியு தொழிற்சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனா். இப்போராட்டத்தால் பேருந்து இயக்குவதற்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தொடா்ந்து போராட்டம் நடைபெற்ால், திண்டுக்கல் கோட்ட மேலாளா் ( வணிகம் )அறிவானந்தம், தேனி கோட்ட மேலாளா் (கம்பம் பொறுப்பு), சரவணன் ஆகியோா் போராட்டம் நடத்தியவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதன்பேரில், சிஐடியு தொழிற்சங்கத்தினா் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

சுமாா் 8 மணி நேரம் நடைபெற்ற இந்த உள்ளிருப்புப் போராட்டத்தால், போக்குவரத்து ஊழியா்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT