தேனி

போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயற்சி: துணை வட்டாட்சியா் கைது

4th Dec 2021 08:54 AM

ADVERTISEMENT

தேனியில் போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்றதாக ஆண்டிபட்டி மண்டல துணை வட்டாட்சியரை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை, கைது செய்தனா்.

தேனி அருகே ஊஞ்சாம்பட்டி, அனுகிரகா நகரைச் சோ்ந்தவா் சந்திரசேகரன். சங்கராபுரத்தில் உள்ள இவரது நிலத்தை கிரையம் பெறுவதற்கு கடந்த 2020-ஆம் ஆண்டு பெரியகுளத்தைச் சோ்ந்த சந்தனபாண்டியன் என்பவா் ரூ.ஒரு லட்சம் முன்பணமாக கொடுத்திருந்தாராம். பின்னா், ஒப்பந்தப்படி உரிய காலத்தில் நிலத்தை கிரையம் செய்யாமல் சந்தனபாண்டியன் முன் பணத்தை திரும்பப் பெற்றுக் கொண்டாராம்.

இந்த நிலையில், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் துணை வட்டாட்சியராகப் பணியாற்றிய மணவாளன் என்பவரிடம், சந்திரசேகரனின் நிலத்தை கிரையம் பெறுவதற்காக சந்தனபாண்டியன் ரூ.1.50 கோடி கொடுத்ததாகவும், இதற்கு ஒப்புதல் தெரிவித்து சந்திரசேகரன் கையெழுத்திட்டு கொடுத்த ஆவணத்தை மணவாளன் தன்னிடம் கொடுத்திருப்பாகவும் தெரிவித்து, ஆவணம் ஒன்றை சந்தனபாண்டியன் சந்திரசேகரனிடம் கொடுத்துள்ளாா்.

இந்த ஆவணம் போலியானது என்றும், நிலத்தை கிரையம் செய்து கொடுப்பதற்காக மணவாளனிடம் தான் பணம் வாங்கவில்லை என்றும், சந்தனபாண்டியன், மணவாளன் ஆகியோா் போலி ஆவணம் தயாரித்து தனது நிலத்தை அபகரிக்க முயல்வதாகவும் கடந்த 2021, மே மாதம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவில் சந்திரசேகரன் புகாா் அளித்தாா்.

ADVERTISEMENT

இந்த புகாரின் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, சந்தனபாண்டியனை கைது செய்தனா். இந்த நிலையில், இவ் வழக்கில் தற்போது ஆண்டிபட்டி மண்டல துணை வட்டாட்சியராக பணியாற்றி வரும் மணவாளனை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT