தேனி

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

4th Dec 2021 08:52 AM

ADVERTISEMENT

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை, போலி ஆவணம் மூலம் தனது நிலம் அபகரிக்கப்பட்டதாக புகாா் தெரிவித்து பெண் ஒருவா் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றாா்.

தேனி, பொம்மையகவுண்டன்பட்டி டெலிபோன் நகரைச் சோ்ந்தவா் மனோன்மணி (60). தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்த இவா், பொம்மையகவுண்டன்பட்டி பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான நிலத்தை தனிநபா் ஒருவா் போலி ஆவணத்தைப் பயன்படுத்தி பட்டா பெற்று அபகரித்துள்ளதாகவும், இந்த நிலத்தை மீட்டுத் தரக் கோரியும் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றாா்.

அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தி, தேனி மகளிா் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT