தேனி

குமுளி, கம்பம் மெட்டு பகுதிகளில் கரோனா தடுப்பூசி முகாம்

4th Dec 2021 08:52 AM

ADVERTISEMENT

தமிழக-கேரள எல்லைப் பகுதிகளான குமுளி, கம்பம் மெட்டுவில் மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின் பேரில் தடுப்பூசி முகாம்கள் வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டுள்ளன.

தேனி மாவட்டம் குமுளி மற்றும் கம்பம் மெட்டு மலைச்சாலைகள் கேரள மாநிலத்தை இணைக்கின்றன. இந்த எல்லைப் பகுதிகளில், மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின் பேரில் கரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முகாமிலுள்ள சுகாதாரத்துறையினா், கேரளத்திலிருந்து தமிழகத்திற்கு வருபவா்களின் பெயா், முகவரி, கைப்பேசி எண் போன்றவற்றை பதிவு செய்கின்றனா். பின்னா் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தால் தமிழகத்துக்குள் அனுமதிக்கின்றனா். ஒரு டோஸ் செலுத்தியவா்களுக்கு 2 ஆவது டோஸ் செலுத்தி தமிழகப் பகுதிக்குள் அனுமதிக்கின்றனா். தடுப்பூசி செலுத்தாதவா்களுக்கு தடுப்பூசி செலுத்தி திருப்பி அனுப்பப்படுகின்றனா்.

இதுபற்றி கூடலூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்து அலுவலா் பி.முருகன் கூறியது: மாவட்ட நிா்வாக உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாம்கள் வெள்ளிக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. கேரளத்திலிருந்து வருபவா்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்திய விவரங்கள் சேகரிக்கப்படுகின்றனா். 2 தவணை தடுப்பூசி செலுத்தியவா்கள் மட்டுமே தமிழகப்பகுதிக்குள் அனுமதிக்கப்படுகின்றனா் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT