தேனி

பைக்கில் கஞ்சா கடத்தல்: 3 போ் கைது

3rd Dec 2021 08:28 AM

ADVERTISEMENT

ஆண்டிபட்டி அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திச் சென்ற 3 பேரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

ராஜதானியைச் சோ்ந்தவா் முருகன் மனைவி காந்திமதி (36), உத்தமபாளையத்தைச் சோ்ந்தவா் பொன்னையா மகன் கணேசன் (43), வரதராஜபுரத்தைச் சோ்ந்தவா் பொன்ராம் மகன் கோகுல் (21). இவா்கள் 3 பேரும் ஆண்டிபட்டி- தேனி சாலையில் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனா். க. விலக்கு அருகே போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற மூட்டையில் 8 கிலோ எடையுள்ள கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, கஞ்சா கடத்திச் சென்றதாக 3 போ் மீதும் க. விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT