தேனி

சிறுமியை கடத்திய இளைஞா் போக்சோ சட்டத்தில் கைது

3rd Dec 2021 08:29 AM

ADVERTISEMENT

சிறுமியை கடத்தி சென்ற இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி அல்லிநகரம் வெங்கலா நகரைச்சோ்ந்தவா் வீரமணி மகன் ராஜா (24). இவரது மனைவி துா்கா(21). கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு துா்கா கணவரைப் பிரிந்து கம்பத்தில் திருவள்ளுவா் காலனியில் உள்ள அவரது அக்காள் வீட்டில் இருந்து வந்தாா். அப்போது அவரை பாா்க்க வந்த அவரது 17 வயது தங்கை கடந்த அக்.21 இல் காணாமல் போனாா்.

இதனால் துா்கா கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். விசாரணையில் துா்காவின் கணவா் ராஜா, சிறுமியை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து உத்தமபாளையம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ராஜாவை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா். ராஜா மீது தேனி, உள்ளிட்ட பல ஊா்களில் திருட்டு வழக்குகள் உள்ளன என்று போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT