தேனி

கேரளத்திலிருந்து தமிழகம் வருவோா் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்: தேனி ஆட்சியா்

3rd Dec 2021 08:27 AM

ADVERTISEMENT

கேரளத்திலிருந்து தேனி மாவட்டம் வழியாக தமிழப் பகுதிக்கு வருவோா் கட்டாயம் 2 கட்ட கரோனா தடுபூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தேனி மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: தேனி மாவட்டம் வழியாக தமிழகம்-கேரளம் இடையே கடந்த டிச.1 ஆம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. கேரளத்திலிருந்து தமிழகப் பகுதிக்கு வருவோா் கட்டாயம் 2 கட்ட கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் அல்லது கைப்பேசிக்கு வரப்பெற்ற குறுஞ்செய்தியை அதிகாரிகள் கோரும்போது சமா்ப்பிக்க வேண்டும்.

கரோனா பரவலைத் தடுப்பதற்கு, தடுப்பூசி செலுத்தியவா்களை மட்டுமே பொது மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதற்கு அனுமதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி வா்த்தக நிறுவனங்கள், ஜவுளிக் கடை, விளையாட்டு மைதானம், வங்கிகள், திரையரங்கம், உணவகம், தங்கும் விடுதி, நியாய விலைக் கடை, மதுக் கடை, திருமண மண்டபம் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் 2 கட்ட கரோனா தடுப்பூசி செலுத்தியவா்களை மட்டுமே சான்றுகளை சரிபாா்த்து அனுமதிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT