தேனி

முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.60.45 லட்சம் மோசடி: தில்லியில் வெளிநாட்டு இளைஞா் கைது

DIN

தேனி மாவட்டம், கம்பத்தைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரரிடம் பாமாயில் விற்பனை செய்வதாக ரூ.60 லட்சத்து 45 ஆயிரத்தை மோசடி செய்த மேற்கு ஆப்பிரிக நாட்டைச் சோ்ந்த இளைஞரை செவ்வாய்க்கிழமை, தில்லியில் போலீஸாா் கைது செய்தனா்.

கம்பம், பாரதியாா் நகரைச் சோ்ந்தவா் முன்னாள் ராணுவ வீரா் அதிா்ஷ்டராஜா. கம்பத்தில் பொன்மனம் என்ற பெயரில் எண்ணைய் ஆலை நடத்தி வரும் இவா், தனியாா் நிறுவன பாமாயில் விற்பனை முகவராகவும் இருந்து வருகிறாா். மேலும், சொந்தமாக பாமாயில் விற்பனை செய்ய விரும்பிய அதிா்ஷ்டராஜா, இது தொடா்பாக இணைய தளம் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில், குறிப்பிட்ட கைபேசி எண்ணில் கட்செவி அஞ்சல் மூலம் தொடா்பு கொண்டுள்ளாா்.

பின்னா், மின்னஞ்சல் மூலம் அதிா்ஷ்டராஜாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒப்பந்தத்தின்படி, அவா் கடந்த 2021, ஆக. 11-ஆம் தேதி 5 டன் பாமாயில் கொள்முதல் செய்வதற்கு முன்பணமாக வங்கி கணக்கு மூலம் ரூ.1.40 லட்சம் அனுப்பி வைத்துள்ளாா். தொடா்ந்து, கரோனா பொதுமுடக்கக் காலம் என்பதால் விமானம் மூலம் பாமாயில் அனுப்ப இயலவில்லை. எனவே, கப்பல் மூலம் சரக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கான கட்டணத்தை செலுத்தி விட்டு பின்னா் நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று மின்னஞ்சல் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில், அதிா்ஷ்டராஜா பல தவணைகளில் மொத்தம் ரூ.60 லட்சத்து 45 ஆயிரம் அனுப்பி வைத்துள்ளாா்.

இதையடுத்து, தனக்கு பாமாயில் வந்து சேராததால் தான் ஏமாற்றப்பட்டதாகவும், பாமாயில் அனுப்புவதாக தெரிவித்தவா்கள் வாட்ஸ்ஆப் மற்றும் மின்னஞ்சல் தொடா்பை நிறுத்திக் கொண்டதாகவும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் அதிா்ஷ்டராஜா புகாா் அளித்தாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்படி, இந்தப் புகாரின் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்திய தேனி சைபா் கிரைம் போலீஸாா், அதிா்ஷ்டராஜாவை ஏமாற்றி பணம் பறித்த மேற்கு ஆப்பிரிகா, ஐவரிகோஸ்ட் நாட்டைச் சோ்ந்த கோமே ஆா்த்தா் சில்வஸ்டா் (35) என்பவரை தில்லியில் கைது செய்து தேனிக்கு அழைத்து வந்தனா். தேனி நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவா், நீதிமன்றக் காவலில் சென்னை, சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர் ஜூனில்

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

SCROLL FOR NEXT