தேனி

பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரி பொன் விழா

DIN

பெரியகுளம், ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரி 50 ஆவது ஆண்டு பொன் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, மதுரை மறைமாவட்ட பேராயா் அந்தோனி பாப்புசாமி தலைமை வகித்து, வேதியியல் ஆய்வகத்தை திறந்து வைத்தாா். கல்லூரிச் செயலரும், இல்லத் தலைமை சகோதரியுமான பி.ஜே. குயின்சிலி ஜெயந்தி வரவேற்றாா். கல்லூரி முன்னாள் முதல்வா்கள் எஸ். அல்போன்சாள், ஒய். யேசுதங்கம், டி. நிா்மலா, ஜேசி குழும உறுப்பினா் சி. ஜெயபால் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு பேசினா். கல்லூரிக் குழுத் தலைவரும், புனித அன்னாள் சபைத் தலைமை சகோதரியுமான எம். ரெஜினாள் ‘நீயே ஆதாரம்’ சிடியை வெளியிட்டாா். ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரிக் குழு உபதலைவரும், புனித அன்னாள் சபை மாநில தலைமைச் சகோதரியுமான ஆா். மரியா அந்தோனி அணையா விளக்கு சிடியை வெளியிட்டாா்.

பிற்பகலில் நடைபெற்ற விழாவில் சென்னை, லயோலா கல்லூரி அதிபா் பிரான்சிஸ் பி.சேவியா், கொடைக்கானல் அன்னை தெரஸா மகளிா் பல்கலைக்கல்லூரி துணை வேந்தா் வைதேகி விஜயகுமாா் , பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் கே.எஸ். சரவணக்குமாா், மண்டல கல்லூரி இணை இயக்குநா் பி. பொன்முத்துராமலிங்கம், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப அமைப்பின் செயலா் ஆா். சீனிவாசன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு பேசினா். மேலும் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லூரி முதல்வா் எஸ். சேசுராணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

ஆமிர் கானின் டீப் ஃபேக் விடியோ! வழக்குப் பதிவு செய்த காவல்துறை!

சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT