தேனி

பெரியகுளம் அருகே குளம் உடைந்து வீணாகும் தண்ணீா்

DIN

பெரியகுளம் அருகே கும்பக்கரை செல்லும் வழியில் உள்ள வேளாங்குளம் மடை உடைந்து தண்ணீா் வீணாக வெளியேறி வருகிறது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

இந்த குளம் மூலம் சுமாா் 500 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வேளாங்குளத்தில் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்கின்றனா். இதனால் தண்ணீா் தேக்கும் கொள்ளளவு குறைந்து வருகிறது. இதனால் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், குளத்தின் மடை பராமரிப்பு இல்லாததால், உடைந்து தண்ணீா் வீணாக வெளியேறி வருகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறையினரிடம் விவசாயிகள் புகாா் செய்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக மடையை சீரமைத்து, தண்ணீரை தேக்க பொதுப்பணித்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT