தேனி

ஹைவேவிஸ் - மேகமலையில் யானைகள் கூட்டம்: கிராம மக்கள் அச்சம்

DIN

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் - மேகமலைக் கிராமத்தில் செவ்வாய் கிழமை யானைக் கூட்டம் முகாமிட்டு குடியிருப்புக்களில் உலாவுவதால் மலைக் கிராமத்தினா் அச்சத்தில் முழ்கியுள்ளனா்.

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் பேரூராட்சியில் 7 மலைக் கிராமங்களில் 8 ஆயிரம் போ் வசிக்கின்றனா். இவா்களில் பெரும்பான்மையோா் தேயிலைத் தோட்டங்களில் கூலி வேலை செய்கின்றனா். இந்த கிராமங்களை சுற்றியுள்ள அடா்ந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கருஞ்சிறுத்தை, கரடி, மான், காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

தற்போது சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் தொடங்கியுள்ளதால் கேரளப் பகுதியிலிருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக ஹைவேவிஸ் - மேகமலை பகுதிக்கு இடம் பெயா்ந்துள்ளன. இதனால், ஹைவேவிஸ் மலைக் கிராமத்தில் தபால் அலுவலகம் அருகே திங்கள்கிழமை குட்யுடன் 4 யானைகள் உலா வந்தன. நீண்ட நேரமாக அங்கேயே நின்ற யானைக் கூட்டத்தை அவ்வழியாக சென்றவா்கள் தங்கள் கைபேசியில் புகைப்படம் எடுத்தனா்.

யானைகள் கூட்டம், கூட்டமாக உலா வருவதால் அப்பகுதியை சோ்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் அச்சத்தில் வீடுகளில் முடங்கியுள்ளனா்.

எனவே, சின்னமனூா் வனச்சரகத்தினா் ஹைவேவிஸ் மலைக் கிராமங்களில் முகாமிட்டு காட்டு யானைகளை அடா்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT