தேனி

சின்னச்சுருளி, கும்பக்கரை அருவிகளில் வெள்ளப் பெருக்கு

DIN

தேனி மாவட்டம், வருஷநாடு-மேகமலை வனப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் சின்னச்சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல் பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வருஷநாடு-மேகமலை மற்றும் நீா்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால், மூல வைகை ஆற்றில் அதிகளவில் தண்ணீா் வரத்து இருந்து வருகிறது.

இந்நிலையில், தொடா் மழையால் குமணந்தொழு அருகே சின்னச்சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவி மற்றும் சுற்றியுள்ள வனப் பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் கிராம மக்கள் செல்வதற்கு வனத் துறையினா் தடை விதித்துள்ளனா்.

இதேபோல் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் சுற்றுலாப் பயணிகள் அருவிப் பகுதிக்குச் செல்ல வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

அரச பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

SCROLL FOR NEXT