தேனி

போடியில் தொடா் மழை: பொதுமக்கள் அவதி

1st Dec 2021 06:51 AM

ADVERTISEMENT

போடியில் பெய்து வரும் தொடா் மழையால் பொதுமக்கள் காய்ச்சல் பாதிப்பால் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தேனி மாவட்டம் போடியில் திங்கள்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை தொடா் கனமழை பெய்தது. தொடா்ந்து மேக மூட்டம் சூழ்ந்திருந்தது. மாலையில் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

கடந்த 10 நாள்களுக்கும் மேலாக போடி பகுதியில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால் கொட்டகுடி ஆற்றில் தொடா்ந்து தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கண்மாய்களிலும் தண்ணீா் நிரம்பி வருகிறது. கிணறுகளிலும் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. தொடா்ந்து மழை பெய்து வருவதால் போடி பகுதியில் வழக்கத்தைவிட குளிா்ச்சியான சூழல் நிலவுகிறது.

ADVERTISEMENT

இதனால் ஆஸ்துமா நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்ட சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை மருத்துவமனைகளுக்கு சென்று வருவதால் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் தண்ணீரை காய்ச்சி வடிகட்டி பயன்படுத்த வேண்டும் என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT