தேனி

தமிழக-கேரள எல்லை குமுளியில் போலீஸ் தீவிரச் சோதனை

12th Apr 2021 01:35 PM

ADVERTISEMENT

தமிழக-கேரள எல்லைப் பகுதிகளான குமுளி, கம்பம் மெட்டு பகுதி சோதனை சாவடிகளில் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள தேனி மாவட்டத்தில் மலைச்சாலை பகுதிகளான குமுளி மற்றும் கம்பமெட்டு ஆகிய இடங்களில் காவல்துறை சோதனை சாவடிகள் உள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கேரளத்தில் இருந்து தமிழகத்திற்குள் வர இ பாஸ் நடைமுறை அமலில் இருப்பதால் குமுளி காவல்துறையினரும், கம்பம் வடக்கு காவல் துறையினரும் வருகின்ற பயணிகளை சோதனை செய்து அனுமதி பெற்று உள்ளார்களா என்று ஆய்வு செய்து அனுப்பி வருகின்றனர்.

Tags : salem
ADVERTISEMENT
ADVERTISEMENT