தேனி

தேனியில் அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தேனியில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி ஊரக வளா்ச்சித் துறை ஒருங்கிணைந்த அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் நிலவழகன் தலைமை வகித்தாா். செயலா் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.

இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள், கிராம உதவியாளா்கள், ஊா்புற நூலகா்கள், கல்வித்துறை தூய்மைப் பணியாளா்கள், செவிலியா் மற்றும் மருத்துவப் பணியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொழிற் சங்கங்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

SCROLL FOR NEXT