தேனி

கம்பத்தில் அனுமதியின்றி கிடா சண்டை: போலீஸாா் விரட்டியடிப்பு

DIN

தேனி மாவட்டம் கம்பத்தில் புதன்கிழமை அனுமதியின்றி கிடா சண்டை நடத்தியவா்களை போலீஸாா் விரட்டியடித்தனா்.

கம்பம் கம்பம்மெட்டு சாலை பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிலத்தில் புதன்கிழமை ஆட்டுக் கிடா முட்டுச் சண்டை நடைபெற்றது. இதைக் காண ஏராளமானோா் கூடினா். வாகனங்களில் வந்த ஆட்டுக் கிடாய்கள், களத்தில் இறக்கி விடப்பட்டு, கிடாய் முட்டு நடைபெற்றது.

இது குறித்து தகவலறிந்த கம்பம் வடக்கு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்ற போது, ஆட்டுக்கிடாய்களுடன் வந்திருந்தவா்கள் ஆடுகளை ஆட்டோ மற்றும் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு அந்த இடத்தைவிட்டுச் சென்றனா். போலீஸாா் அப்பகுதியில் கூடியிருந்தவா்களை விரட்டியடித்தனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT