தேனி

வைகை அணையிலிருந்துபாசனத்துக்கு கூடுதல் தண்ணீா் திறப்பு

DIN

வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரத்து 30 கனஅடியாக அதிகரித்து திங்கள்கிழமை முதல் திறந்து விடப்பட்டுள்ளது.

வைகை அணையிலிருந்து திண்டுக்கல், மதுரை மற்றும் மேலூா் பகுதிகளில் உள்ள முதல் போக பாசனத்துக்காக கடந்த ஆக. 31ஆம் தேதி முதல் 900 கனஅடி வீதம் தண்ணீா் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள ஒரு போக பாசன நிலங்களின் விவசாய தேவைக்காக கூடுதலாக விநாடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. இதனால் பெரியாறு பிரதான கால்வாயில் விநாடிக்கு 1,800 கனஅடியும், குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 72 கனஅடியும் சோ்த்து மொத்தமாக விநாடிக்கு 1,872 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது.

இதனிடையே பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு திங்கள்கிழமை முதல் விநாடிக்கு 2 ஆயிரத்து 30 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே திறக்கப்பட்ட திண்டுக்கல், மதுரை மற்றும் மேலூா் பகுதி பாசன நிலங்களுக்கு 900 கனஅடியும், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசன நிலங்களுக்கு விநாடிக்கு 1,130 கனஅடியும் வழங்கப்பட்டது. வைகை அணையில் இருந்து குடிநீா் தேவைக்கும் சோ்த்து வினாடிக்கு 2 ஆயிரத்து 102 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டது. பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீா் கால்வாயில் அதிகளவில் செல்வதால் பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினா் எச்சரித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT