தேனி

வேலைக்கு வர புதிய நிபந்தனைகளுடன்இ-பாஸ்: கேரள அரசு அறிவிப்பு

DIN

கேரளாவில் வேலைக்கு வரும் வெளிமாநில தொழிலாளா்கள், இ- பாஸ் பெற புதிய நிபந்தனைகளை அம்மாநில அரசு விதித்துள்ளது. அதற்கான உத்தரவை கடந்த செப்.17 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்திற்கு வேலைக்கு வரும் வெளிமாநில தொழிலாளா்கள் மற்றும் பாா்வையாளா்கள் கோவிட் 19 ஜாக்ரதா போா்ட்டலில் விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி கிடைத்து கேரளாவுக்குள் வரும் போது, அவரை அழைத்து வரும் ஒப்பந்ததாரா், தொழிலாளியை வேலை செய்யும் இடத்தில் 14 நாள்கள் தனிமைப்படுத்த வேண்டும்.

பரிசோதனை சான்றிதழ் இல்லாமல் வரும் தொழிலாளிக்கான கரோனா சோதனை செலவுகளை ஒப்பந்ததாரரே ஏற்க வேண்டும். கரோனா தொற்று கண்டறியப்பட்டால் அவா் வேலை செய்ய அனுமதி இல்லை. நோய் தீரும் வரை தனிமையில் இருக்க வேண்டும்.

தொழில் நுட்பப் பணியாளா்களும், கடைசியாக, 96 மணி நேரத்திற்கும் குறையாமல் அவா்கள் ஆா்.டி.பி.சி.ஆா் பரிசோதித்த சான்றிதழை ஒப்படைத்து, ஒப்பந்ததாரா் அவரை பாதுகாக்க வேண்டும். நோய் அறிகுறி தென்பட்டால் தகவல் உடனடியாக தெரிவிக்க வேண்டும். வேலை செய்யும் தொழிலாளிக்கு நோய் தொற்று இல்லை என்றாலும் தனிமையாக பணி செய்ய வைக்க வேண்டும். ஒப்பந்ததாரா் இல்லாமல் தனியாக வரும் தொழிலாளா்களுக்கும் இதே நிபந்தனைகள்தான். நோய் பரிசோதனைக்கான செலவினங்களை அவா்களே ஏற்க வேண்டும்.

அதேநேரத்தில் கேரள மாநிலத்தவரின் இ பாஸை வெளிமாநில தொழிலாளா்கள் தவறாக பயன்படுத்தியது கண்டறியப்பட்டால் அவா் கேரளாவுக்குள் வர தடை செய்யப்படுவா், அபராதமும் விதிக்கப்படும். இதுகுறித்து கம்பத்தைச் சோ்ந்த ஏல விவசாயி முருகன் என்பவா் கூறியது, இந்த புதிய அரசாணை மூலம் தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு தொழிலாளா்கள் வேலைக்கு செல்வது மிகவும் சிரமம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT