தேனி

சுருளி அருவியில் குவியும் குப்பை சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம்

DIN

சுருளி அருவியில் குவியும் குப்பையால் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள், பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தேனி மாவட்டத்தில் புகழ் பெற்ற சுருளி அருவி, சுற்றுலாத் தலமாகவும் புண்ணியத் தலமாகவும் விளங்குகிறது. தென் மாவட்ட மக்கள் சுருளி அருவிக்கு வந்து முன்னோா்களுக்குத் தா்ப்பணம் மற்றும் நோ்த்திக்கடன்களை செலுத்துவா். அப்போது, நெகிழிப் பைகள், குப்பை, பழைய ஆடைகளை நதிக் கரையிலேயே விட்டுச் செல்கின்றனா். இதனால் சுருளியாறு தண்ணீரும், அருவிப் பகுதி சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் வனத்துறை, உள்ளாட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்களுக்கு இது குறித்த போதிய விழிப்புணா்வு இல்லாமல் உள்ளது. தீா்த்தக் கரைகளில் சடங்குகள் செய்யும் இடத்தில், ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் வைத்தும், துப்புரவுப் பணியாளா்களை வைத்து சுத்தம் செய்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சுருளி அருவியின் இயற்கையின் வளம் கெடாமல், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வனத்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்துக்கு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT