தேனி

சுருளி அருவியில் குவியும் குப்பைகளால் சூழல் பாதிக்கும் அபாயம்

27th Sep 2020 03:49 PM

ADVERTISEMENT

கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் குவியும் குப்பைகளால் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளம் பாதிக்கும் அபாயம் உள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் புகழ் பெற்றது சுருளி அருவி. இந்த அருவி சுற்றுலாத் தலமாகவும் புண்ணிய தலமாகவும் விளங்குகிறது. தென் மாவட்ட மக்கள் சுருளி அருவிக்கு வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் மட்டும் நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள். அருவியில் உள்ள தீர்த்தக் கரையில், பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்யும்போது பிளாஸ்டிக் கவர்கள், குப்பைகள் பழைய ஆடைகளை நதிக் கரையிலேயே விட்டுச் செல்கின்றனர்.

இதனால் சுருளியாறு தண்ணீரும், அருவி பகுதி சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் வனத்துறை, உள்ளாட்சி அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால், பொதுமக்களுக்கு இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. தீர்த்தக் கரைகளில் சடங்குகள் செய்யும் இடத்தில், ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் வைத்தும், துப்புரவு பணியாளர்களை வைத்து சுத்தம் செய்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இதன் மூலம் சுருளி அருவியின் இயற்கையின் வளம் கெடாமல், சுற்றுச்சூழலை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் வனத்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

Tags : theni
ADVERTISEMENT
ADVERTISEMENT