தேனி

கூடலுார் ஒட்டான்குளத்தில் நீர்க்கசிவு

27th Sep 2020 03:55 PM

ADVERTISEMENT

கூடலுார் ஒட்டான்குளம் கண்மாய் கரையில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதால் உடையும் அபாயம் உள்ளது. 

தேனி மாவட்டம், கூடலுார் ஒட்டான்குளம் கண்மாயை நம்பி 500 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி உள்ளது. தற்போது முதல்போகத்திற்காக நெல் நடவு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. கண்மாயில் நீர் நிரம்பியுள்ளது. ஒன்றரை கி.மீ., நீளமுள்ள இக்கண்மாய் கரையின் தெற்குப்பகுதியில் நீர்க்கசிவு ஏற்பட்டு அருகேயுள்ள விவசாய நிலத்தில் வெளியேறி வருகிறது. இதனால் கரைப்பகுதி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

கூடலுார் முல்லைச்சாரல் விவசாய சங்க தலைவர் கொடியரசன் கூறியது, 2 ஆண்டுகளுக்கு முன் கண்மாயின் கரைப்பகுதி பல லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் பொதுப்பணித்துறையினரால் குளத்தில் இருந்த மண்ணை எடுத்து சீரமைக்கப்பட்டது. ஆனால்  நீர்த்தேக்கப்பகுதியில் உள்ள கரையில் கற்களை அடுக்கி சீரமைக்கவில்லை. தற்போது நீர் நிரம்பி வருவதால் நீர்க்கசிவு மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. 

சில ஆண்டுகளுக்கு முன் இக்கண்மாயின் கரைப்பகுதி உடைப்பு ஏற்பட்டது. அதேபோல் தற்போதும் உடைப்பு ஏற்படுவதற்கு முன் பொதுப்பணித்துறையினர் சீரமைக்க வேண்டும் என்றார்.

ADVERTISEMENT

Tags : theni
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT