தேனி

புரட்டாசி 2 ஆம் சனிக்கிழமை:போடிபெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை

DIN

போடி: போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, பெருமாள் மலா்அலங்காரத்தில் காட்சியளித்தாா்.

போடியில், இந்து சமய அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது. பெருமாளுக்கு மஞ்சள், பால், இளநீா், குங்குமம், பழங்கள் உள்ளிட்ட 16 வகையான மங்கலப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், மலா் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடத்தப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை, கோயில் தலைமை அா்ச்சகா் சீனிவாசவரதன் என்ற காா்த்திக் மற்றும் கட்டளைதாரா்கள் செய்திருந்தனா்.

போடி ஜக்கமநாயக்கன்பட்டி போஸ் பஜாரில் அமைந்துள்ள ஸ்ரீராமா் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபட்டனா். தொடா்ந்து, போடி வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வளாகத்தில் உள்ள சங்கரநாராயணா் கோயிலில் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

இதேபோல், போடி ஜக்கமநாயக்கன்பட்டி தொட்டராயசுவாமி ஒன்னம்மாள் கோயில், மேலச்சொக்கநாதபுரம் தொட்டராயசுவாமி ஒன்னம்மாள் கோயில், போடி-ரெங்கநாதபுரம் ஸ்ரீரெங்கநாதா் கோயில், தேவாரம் ஸ்ரீரெங்கநாதசுவாமி கோயில் ஆகிய கோயில்களிலும் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

SCROLL FOR NEXT