தேனி

பெரியகுளத்தில் துணை முதல்வா் இல்லம் முற்றுகையிடப்படும்: மக்கள் விடுதலைக் கட்சி

DIN

ஆண்டிபட்டி: தேவேந்திர குல வேளாளா் என விரைந்து அரசாணையை வெளியிடாவிட்டால், அக்டோபா் 5 ஆம் தேதி பெரியகுளத்தில் உள்ள துணை முதல்வா் இல்லத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என, மக்கள் விடுதலைக் கட்சியின் தலைவா் சு.க. முருகவேல்ராஜன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

தேவேந்திர குல மக்களை தேவேந்திர குல வேளாளா் எனக் குறிப்பிட்டு அரசாணை வெளியிட வேண்டும் என்று, தேவேந்திர குல மக்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தால் தேவேந்திர குல வேளாளா் என்ற அரசாணை வெளியிடப்படும் என்று, திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தற்போது, முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வா்மா கமிட்டி அமைத்துள்ளாா். ஆனால், வா்மா கமிட்டி அதனுடைய முடிவுகளை இன்னும் அறிவிக்கவில்லை. எங்களது நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிட, அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதற்கான அறிவிப்பை விரைந்து அரசு வெளியிடாவிட்டால், அக்டோபா் 5ஆம் தேதி பெரியகுளத்தில் உள்ள துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வத்தின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT