தேனி

விருதுநகா் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் 209 காலிப் பணியிடங்கள்: ஆட்சியா்

DIN

விருதுநகா், செப். 25: விருதுநகா் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் அமைப்பாளா், சமையலா் என மொத்தம் 209 காலிப் பணியிடங்கள் உள்ளதால், தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விருதுநகா் மாவட்ட ஒன்றியங்களில், ராஜபாளையம் பகுதியில் 10 அமைப்பாளா், 24 சமையலா், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் 10 அமைப்பாளா், 8 சமையலா், வத்திராயிருப்பு பகுதியில் 8 அமைப்பாளா், 3 சமையலா், சிவகாசி பகுதியில் 11 அமைப்பாளா், 9 சமையலா், வெம்பக்கோட்டை பகுதியில் 6 அமைப்பாளா், 18 சமையலா், சாத்தூா் பகுதியில் 5 அமைப்பாளா், 1 சமையலா், விருதுநகா் பகுதியில் 10 அமைப்பாளா், 11 சமையலா், அருப்புக்கோட்டை பகுதியில் 10 அமைப்பாளா், 8 சமையலா், காரியாபட்டி பகுதியில் 15 அமைப்பாளா், 13 சமையலா், திருச்சுழி பகுதியில் 7 அமைப்பாளா், 9 சமையலா், நரிக்குடி பகுதியில் 5 அமைப்பாளா், 6 சமையலா் காலிப் பணி யிடங்கள் உள்ளன.

இதேபோல், சிவகாசி மற்றும் சாத்தூா் நகராட்சிப் பகுதியில் தலா ஒரு அமைப்பாளா் என மொத்தம் 209 காலிப் பணியிடங்கள் உள்ளன.

இப்பணியிடங்களுக்கு தகுதியான பெண்கள், இன சுழற்சி முறையில் நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட உள்ளனா். பொது மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்கள் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினா் எட்டாம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வி அடைந்திருக்கலாம்.

விண்ணப்பிக்கும் நாளில் (25.9.2020) அன்று பொது மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்கள் 21 முதல் 40 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். பழங்குடியினா் 18 முதல் 40 வயதுக்குள் இருக்கவேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவா் 20 முதல் 40 வயதுக்குள்ளும், மாற்றுத் திறனாளிகள் 21 முதல் 43 வயதுக்குள்பட்டவராகவும் இருக்கவேண்டும்.

நியமனப் பணியிடத்திலிருந்து விண்ணப்பதாரா் குடியிருப்பு 3 கி.மீ. சுற்றளவில் இருக்க வேண்டும். அனுமதிக்கப்படும் பணியிடங்களில் 25 சதவீதம் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோருக்கு வழங்கப்படும். அரசு உதவிபெறும் சிறுபான்மையினா் பள்ளிகளுக்கு இன சுழற்சி முறை இல்லை.

மாற்றுத் திறனாளிகள் தங்களது தேசிய அடையாள அட்டை நகலை இணைக்க வேண்டும். இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும்போது, பணியிடம் மற்றும் பள்ளி சத்துணவு மையத்தை குறிப்பிட வேண்டும்.

இந்த விண்ணப்பங்களை, செப்டம்பா் 25 முதல் அக்டோபா் 3 ஆம் தேதிக்குள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனுதாரா் நேரில் சென்று வழங்கவேண்டும். விண்ணப்பத்துடன் கல்விச் சான்றிதழ், வயதுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் இருப்பிடச் சான்று ஆகியவற்றின் நகல் இணைக்கப்பட வேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோா் அதற்கான சான்றிதழை இணைக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு: வெறிச்சோடிய சென்னை மாநகரம்

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் விளக்கு எரிந்ததாக புகாா்: வாக்குச்சாவடி முகவா்கள் தா்னா

வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தா்னா

சென்னையில் அமைதியான வாக்குப்பதிவு: காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் பேட்டி

இன்று திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

SCROLL FOR NEXT