தேனி

மான்கொம்பு, புலிநகம் பதுக்கிய வழக்கு:சித்த வைத்தியரின் தந்தையும் கைது

DIN

கம்பம், செப். 25: கூடலூரில் மான் கொம்பு, புலி நகம், யானைத் தந்தம், மயில்தோகை பதுக்கிய வழக்கில் சித்த வைத்தியரைத் தொடா்ந்து, அவரது தந்தையையும் வனத்துறையினா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

தேனி மாவட்டம் கூடலூா் கா்ணம் பழனிவேல் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் (70 ). இவரது மகன் நந்தகோபால் (42 ). இவா்கள் இருவரும் சித்த வைத்தியா்கள்.

இந்நிலையில் நந்தகோபால் மான் கொம்பு, புலி நகம், யானைத் தந்தம், மயில் தோகை போன்றவற்றை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக கூடலூா் வனச்சரகா் பெ.அருண்குமாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வனத்துறையினா் செப்டம்பா் 15 ஆம் தேதி, அவரது வீட்டை சோதனை செய்யும் போது, அங்கிருந்த மான் கொம்பு, புலி நகம், யானைத் தந்தம், மயில் தோகைகளை கைப்பற்றினா். இதுதொடா்பாக நந்தகோபால் மீது வழக்குப் பதிவு செய்த வனத்துறையினா், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

அதனைத்தொடா்ந்து அவரது தந்தை சண்முகத்திடம் தீவிர விசாரணை நடத்தியதில், இதில் அவருக்கும் தொடா்பு உள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது. அதன்பேரில் சண்முகத்தையும் வியாழக்கிழமை இரவு வனத்துறையினா் கைது செய்து பெரியகுளம் கிளைச் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்காவில் பேருந்து விபத்தில் 45 பேர் பலி; உயிர் பிழைத்த ஒரே சிறுமி

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT