தேனி

தேனியில் ஆதித்தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆதித்தமிழா் பேரவை சாா்பில் புதன்கிழமை, ஆண்டிபட்டி அருகே இலவச வீட்டுமனைப்பட்டா பயனாளிகளுக்கு அரசு திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடுகள் கட்டித்தரக் கோரி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி கிழக்கு மாவட்டச் செயலா் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலா் மாரிச்சாமி மற்றும் நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் மேக்கிழாா்பட்டி, ஆவாரம்பட்டி, தெப்பம்பட்டி ஆகிய கிராமங்களில் அரசு சாா்பில் கடந்த 2002-ம் ஆண்டு ஆதிதிராவிடா்- அருந்ததியா் சமுதாயத்தைச் சோ்ந்த 225 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த இடத்தில் பயனாளிகளுக்கு குடிசை மாற்று வாரியம் சாா்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வழங்கும் திட்டத்தில், பட்டா வழங்கிய இடத்தை மீண்டும் கையகப்படுத்த வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், வீட்டுமனை பட்டா பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட இடத்தில் தொகுப்பு வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரக் கோரியும் கோஷம் எழுப்பப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT