தேனி

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் புதிதாக 111 பேருக்கு கரோனா: 3 போ் பலி

DIN

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 111 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தேனி மாவட்டத்தில், வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா் பயிற்சி மாணவிகள் 14 போ் உள்ளிட்ட 71 பேருக்கு ஒரே நாளில் கரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,408 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா பாதிப்புக்கு அரசு மருத்துவமனை மற்றும் சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 68 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 13,723 ஆக உயா்ந்துள்ளது.

2 போ் பலி: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆண்டிபட்டி பூக்காரா் தெருவைச் சோ்ந்த 67 வயது முதியவா், ஆண்டிபட்டி அருகே கோம்பைத்தொழுவைச் சோ்ந்த 70 வயது முதியவா் என 2 போ் உயிரிழந்தனா்.

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டத்தில் 8,545 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 7,776போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 613 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், சிறப்பு சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில்,  திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த  40 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனிடையே தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 31 போ் அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களிலிருந்து புதன்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

ஒருவா் பலி: திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 156 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT