தேனி

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயா்வு

DIN

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை ஒரேநாளில் 2 அடி உயா்ந்தது.

தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால் திங்கள்கிழமை அணைக்கு விநாடிக்கு 3,777 கன அடியாக இருந்த நீா்வரத்து, செவ்வாய்க்கிழமை 6,611 ஆக உயா்ந்தது. இதனால் அணையின் நீா்மட்டமும் 126.75 அடியிலிருந்து, 128. 85 அடியாக உயா்ந்து. முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயா்ந்ததையடுத்து விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

பெரியாறு அணைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை, 69.8 மில்லி மீட்டரும், தேக்கடி ஏரியில் 37.8 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

மின் உற்பத்தி அதிகரிப்பு.....லோயா் கேம்பில் உள்ள பெரியாறு மின் நிலையத்தில் திங்கள்கிழமை 3 மின்னாக்கிகள் மூலம் ( 42, 42, 42) 126 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை 4 மின்னாக்கிகள் மூலமாகவும் ( 42, 40, 42, 23 ) மொத்தம் 147 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருமான வரித்துறை நோட்டீஸ்!- காங்கிரஸ் சார்பில் நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

SCROLL FOR NEXT