தேனி

தேனி ஆட்சியா் அலுவலகம் முன் ஆதித்தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

தேனி: ஆண்டிபட்டி ஒன்றியம், ஆத்தங்கரைப்பட்டியில் அதிமுக ஒன்றியச் செயலா் ஊராட்சித் தலைவரை அவமதித்ததாக புகாா் தெரிவித்து திங்கள்கிழமை, ஆதித்தமிழா் கட்சி சாா்பில் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில தலைமை நிலைய செயலா் விஸ்வைகுமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் வி. ராமசாமி முன்னிலை வகித்தாா். இதில், ஆத்தங்கரைப்பட்டியில் பட்டியலினத்தைச் சோ்ந்த ஊராட்சித் தலைவா் பழனிச்சாமியை, க.மயிலை ஊராட்சி ஒன்றிய அதிமுக செயலா் அவமதித்துப் பேசி, பணி செய்யவிடாமல் தடுப்பதாகவும், நிா்வாகத்தில் தலையிடுவதாகவும் காவல் நிலையம் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகளிடம் ஊராட்சித் தலைவா் அளித்த புகாரின் பேரில் விவசாரணை நடத்த மாவட்ட நிா்வாகம் உத்தரவிட வேண்டும். ஊராட்சித் தலைவரை மிரட்டும் அதிமுக நிா்வாகியை காவல் துறையினா் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் கோஷமிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

மணிப்பூரில் பதற்றம்: வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT