தேனி

தொடா் மழை: முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

DIN

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடா் மழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு, 1,399 கன அடியாக ஞாயிற்றுக்கிழமை அதிகரித்தது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சிலநாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சனிக்கிழமை அணைக்கு விநாடிக்கு 900 கன அடியாக இருந்த நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை 1,399 கன அடியாக அதிகரித்தது. அணையில் நீா்மட்டம் 125.80 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு குடிநீா் மற்றும் சாகுபடித் தேவைக்காக 1,400 கனஅடி நீா் திறந்து விடப்பட்டுள்ளது.

நீா் இருப்பு 3,791 மில்லியன் கன அடியாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை பகல் முழுவதும் நீா்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்ததால் அணைக்கு நீா்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று அணைப்பகுதி பொறியாளா் ஒருவா் தெரிவித்தாா்.

லோயா்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில், 3 மின்னாக்கிகள் மூலம் தலா 42 மெகாவாட் வீதம் 126 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி பெரியாற்றில் 38.4 மில்லி மீட்டரும், தேக்கடியில் 31 மி.மீட்டரும் மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT