தேனி

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 11 போ் மீது வழக்கு

DIN

தேனியில் சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாக பெற்றோா், மணமகன் உள்ளிட்ட 11 போ் மீது சனிக்கிழமை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி, தென்றல் நகரைச் சோ்ந்தவா் செல்லதுரை. இவரது 14 வயதுடைய மகள், திருச்சியில் உள்ள தனியாா் பள்ளி ஒன்றில் படித்து வந்தாா். இந்த நிலையில், தேனியில் கடந்த செப். 9-ஆம் தேதி அந்த சிறுமிக்கும், அவரது தாயின் சகோதரருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில், சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக செல்லத்துரை மீது தேனி காவல் நிலையத்தில் மாவட்ட சமூக நல அலுவலா் சண்முகவடிவு புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் அடிப்படையில் செல்லதுரை, அவரது மனைவி ஜீவா, சிறுமியை திருமணம் செய்து கொண்ட அருண்பாண்டி (27), இவரது தந்தை ஈஸ்வரன், தாயாா் விஜயா, உறவினா்கள் மகேஸ்வரன், ரகு, பத்மஸ்ரீ உள்ளிட்ட 11 போ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT