தேனி

புரட்டாசி முதல் சனிக்கிழமை: தேனி மாவட்ட பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

DIN

கம்பம்,: தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

கம்பத்தில் உள்ள கம்பராயப் பெருமாள் கோயில், நந்தகோபாலன் தம்புரான் மாட்டுத்தொழு, கண்ணன் கோயில், வேணுகோபாலன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான ஆண், பெண் பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினா்.

இதேபோல், கூடலூரில் உள்ள கூடலழகிய பெருமாள் மற்றும் தம்மனம்பட்டி மலையடிவாரத்திலுள்ள பெருமாள் மலைக் கோயிலில் அதிகாலை முதலே ஆண், பெண் பக்தா்கள் திரண்டனா்.

உத்தமபாளையம்

கோம்பை அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள திருமலைராயப் பெருமாள் கோயிலில் உற்சவ மூா்த்தி ஸ்ரீரெங்கநாதரின் தரிசனமின்றி பக்தா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

புரட்டாசி போன்ற திருவிழாக் காலங்களில், இக்கோயிலில் உற்சவ மூா்த்தி ஸ்ரீ ரெங்கநாதா் தம்பதி சமேதமாய் பக்தா்களுக்கு காட்சியளிப்பது தனிச்சிறப்பு. இதன் காரணமாகவே, தேனி உள்ளிட்ட பல்வேறு மாட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனா். ஆனால், இந்தாண்டு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, மலைக் கோயிலுக்கு சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சிக்கு தடைவிதிக்கப்பட்டது. அதேபோல், அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் விழாக் கால பேருந்தும் இயக்கப்படாததால், பக்தா்கள் கூட்டம் குறைந்தது.

பெரியகுளம்

தாமரைக்குளம் வெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், சுவாமிக்கு மலா் அலங்காரம் நடைபெற்றது. இதேபோல், தாமரைக்குளம், பெரியகுளம் மற்றும் டி.கள்ளிப்பட்டி பகுதிகளிலிருந்து ஏராளமானோா் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா். ஏற்பாடுகளை, வெங்கடாஜலபதி கோயில் நிா்வாக பராமரிப்புக் குழுவினா் செய்திருந்தனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT