தேனி

கம்பம் அருகே முல்லைப் பெரியாற்றில் பேரிடா் மீட்பு ஒத்திகை

DIN

கம்பம்: வடகிழக்குப் பருவமழை காரணமாக, பேரிடா் காலங்களில் ஏற்படும் சேதங்கள் மற்றும் விபத்துகளை தவிா்க்க, முல்லைப் பெரியாற்றில் போக்குவரத்து மற்றும் தீயணைப்புத் துறையினா் மீட்புப் பணிகளுக்கான ஒத்திகையை சனிக்கிழமை நடத்தினா்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து, முல்லைப் பெரியாற்றின் கரையோரப் பகுதிகளில் ஏற்படும் வெள்ளம், இயற்கை சேதங்கள், விபத்துகளை தவிா்க்கவும் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், கம்பம் போக்குவரத்து காவல் துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் இணைந்து, மாதிரி மீட்புப் பணிகளுக்கான ஒத்திகையில் ஈடுபட்டனா்.

மழை வெள்ளத்தில் ஆற்றில் இழுத்துச் செல்பவா்களை காப்பாற்றுவது உள்ளிட்ட பல்வேறு மீட்புப் பணிகளை தீயணைப்புத் துறையினா் ஒத்திகை செய்து காண்பித்தனா். இந்நிகழ்ச்சியில், கம்பம் போக்குவரத்து காவல் ஆய்வாளா் அ. தட்சிணாமூா்த்தி, தீயணைப்புத் துறை அலுவலா் எஸ். அழகா்சாமி ஆகியோா் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தி பேசினா். இதை, ஏராளமான பொதுமக்கள் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

SCROLL FOR NEXT