தேனி

தொடா் மழை: சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு

DIN

கம்பம்: தொடா் மழை காரணமாக, தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் சனிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி வனப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை மற்றும் நீா் ஊற்றுகளில் தண்ணீா் பெருகி, சுருளி அருவிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

ஆனால், தற்போது பொதுமுடக்கம் காரணமாக சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் சுருளி அருவிக்கு வர கடந்த 7 மாதங்களாக தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து வனத் துறை அலுவலா் ஒருவா் கூறுகையில், மேற்கு மலைத் தொடா்ச்சி சுருளி வனப் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அருவிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அருவிப் பகுதிக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டு, வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT