தேனி

போடியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில்  ஆர்ப்பாட்டம்

19th Sep 2020 05:34 PM

ADVERTISEMENT

போடியில் சனிக்கிழமை, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய, மாநில அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்படும் மோடியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் போடி நகர், ஒன்றிய பகுதிகளில் 15 மையங்களில் நடைபெற்றது. 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.ரவிமுருகன், சி.பி.எம்  மாநிலக் குழு உறுப்பினர் கே.ராஜப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். சி.பி.ஐ. கட்சி போடி ஒன்றிய செயலாளர்  மணிகண்டன்  சி.பி.எம்  தாலூகா செயலாளர் செல்வம்,  சி.பி.ஐ. நகர துணை செயலாளர் கே.சத்தியராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்று கோரிக்கை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
 

Tags : theni
ADVERTISEMENT
ADVERTISEMENT